பண பங்கீடு தொடர்பாக இரு கட்சியின் இடையே மோதல்

74பார்த்தது
ஆம்பூரில் தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜக கட்சியினர் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

காவல்துறையினர் முன்னிலையில் வழக்கறிஞரை தாக்கிய ஒரு தரப்பினர்


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பாஜகவினர் இருதரப்பினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர் மாலை நேரத்தில் திடீரென இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்ததால் காவல்துறையினர் தாக்கப்பட்ட கோகுலை மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி