பிரதமர் வாகனம் முன் பாய்ந்த நபர்

61பார்த்தது
பிரதமர் வாகனம் முன் பாய்ந்த நபர்
கர்நாடகாவில் பிரதமர் கான்வாயில் அத்துமீறி பாய முயன்ற காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கபல்லாபூரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்போது போலீசார் தடுப்பை மீறி முகமது நலபாட் என்ற நபர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்த போலீசார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி