திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அங்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கின்றார்களா மருந்து மாத்திரைகள் தங்களுக்கு வழங்கப்படுகிறதா என அங்கு நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ள மாத மாதம் தொடர் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் இங்கு ஏதுவாக உள்ளதா என ஹேமலதா என்ற பெண்ணிடம் ஆட்சியர் கேட்டு அறிந்து கொண்டார்.