வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் மோசடி நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அங்கிநாயனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்வேல் என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: &
வெளிநாட்டில் வேலை செய்ய நான் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறேன். இந்தநிலையில், நாட்டறம்பள்ளி அருகே கே. பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2022&ம் ஆண்டு ரூ. 5 லட்சம் பெற்றுக்கொண்டு போலி விசா ஒன்றை வழங்கினார். அந்த விசாவை பயன்படுத்தி என்னால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, நான் கொடுத்த ரூ. 5 லட்சம் பணத்தை அவரிடம் திரும்ப கேட்டால் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவரிடம் வழங்கிய பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தனர்.