அரக்கோணத்தில் உள்ள திருவள்ளூர் ரோட்டில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மதுபோதையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற ஆசீர்வாதம் (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.