கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது.
நிலச்சரிவு மீட்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் 60 பேர் கூடுதலாக இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே மீட்பு பணியில் வீரர்கள் உள்ளனர். இதுவரை மொத்தம் 300 வீரர்கள் அங்கு உள்ளனர்.