அரக்கோணம் தாலுகா போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர ரோந்து மற்றும் கடைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணம் தாலுகா சப்-இன்ஸ் பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அன்வர்திகான்பேட்டை, மேல்ஆவதம், மாரிமங்களம், மின்னல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேல் ஆவதம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 46) என்பவரது பெட்டிக்க கடையில் சோதனை செய்த போது கடையில் விற்பதற்காக மறைத்து வைத்திருந்த குட்கா, குக்கிலி ஆகியவை இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து 2½ கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.