பிளஸ் டூ பொதுத் தேர்வு வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வை 13 ஆயிரத்து 904 பேர் எழுத உள்ள நிலையில், இன்று முதல் ஹால் டிக்கெட் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் வேலூர் அடுத்துள்ள பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாதேவன் ஹால் டிக்கெட்டுகளை வழங்கினார். அப்போது புறத்தேர்வாளர் ஜனார்த்தனன் உடன் இருந்தார்.