மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.