அ. தி. மு. க. வில் இணைந்த மாற்று கட்சியினர்!

1113பார்த்தது
அ. தி. மு. க. வில் இணைந்த மாற்று கட்சியினர்!
குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ. தி. மு. க. வில் இணையும் நிகழ்ச்சி பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வேலூர் புறநகர் மாவட்ட அ. தி. மு. க. அலுவலகத்தில் நடந்தது.

வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த. வேலழகன் தலைமை தாங்கினார். குடியாத்தம் ஒன்றிய செயலாளர் வனராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜி. மூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் கோபி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சித்திக், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ். எஸ். ரமேஷ், பேரவை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கிரிதரன், மாவட்ட இளைஞரணி அமைப்புச் செயலாளர் ஜெயவேல், குடியாத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், வடக்கு ஒன்றிய இளைஞர் சங்க அமைப்பு தலைவர் வினோத்குமார், கிளைச் செயலாளர் பாலாஜி, வன்னியர் சங்க செயலாளர் பாபு, கிளைச்செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் அ. தி. மு. க. வில் இணைந்தனர். அவர்களை மாவட்ட செயலாளர் வேலழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி