கால்வாய் நீர் கலந்து வெளியேறாததால் போக்குவரத்து பாதிப்பு

75பார்த்தது
நேற்று இரவு வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது மாவட்ட முழுவதும் 791. 80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. வேலூரில் பெய்த அதிக கனமழையின் காரணமாக வேலூர் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரும் கழிவு நீரும் கலந்து வெளியேற வழி இல்லாமல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்க கூட நடக்க முடியாமல் கடும் அவருக்குள்ளாகினர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் வெளியே செல்ல வழி இல்லாத நிலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முதல் பழைய காட்பாடி முத்தமிழ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும் தவித்தனர். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் மழை நீர் தேங்கி தண்ணீர் வெளியேற முடியாமல் தனித்தீவு போல் காட்சியளித்தது. மேலும் சாலை மேம்பாடு மற்றும் பல்வேறு பணிகளால் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழி இல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளது இதனை அடுத்து மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீர் வெளியேற மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி