லாரி மீது டாட்டா ஏசி வாகனம் மோதி 5 பேர் படுகாயம்

73பார்த்தது
ஆம்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது டாடா ஏ சி வாகனம் மோதி விபத்து. டாடா ஏசி ஓட்டுனர் உட்பட 5 பேர் படுகாயம்.

கர்நாடகா மாநிலம் அல்லூர் பகுதியில் இருந்து சென்னைக்கு டைல்ஸ் ஒட்டும் பணிக்காக 5 பேர் டாட்டா ஏசி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் மும்பையில் இருந்து சென்னைக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது டாடா ஏ. சி வாகனம் மோதிய பின்னர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள இரும்பு கம்பி வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கர்நாடக மாநிலம் அல்லுர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஸ்ரீகாந்த், சந்துரு , ஹரி, எஸ்வந்த் மற்றும் டாட்டா ஏசி (மினி வேன்)ஓட்டுநர் பரத் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையில் நின்றதால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் போக்குவரத்து சீர் செய்து பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி