ஆம்பூர் அருகே நடைபெற்ற ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா!

62பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த தேவிகாபுரம், உடையராஜாபாளையம் , புதூர், தோட்டாளம், கொல்லாபுரம் சீனிவாசன் நகர் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் இணைந்து பல ஆண்டுகளாக அருள்மிகு ஸ்ரீகெங்கையம்மன், காளியம்மன் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தி வருகின்றனர்.
இத்திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் கூழ் அமுது படைத்தல், மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊர்வலம் ஆராதனை நடந்தது. அம்மனுக்கு ஏராளமான பெண்கள் பொங்கலிட்டும் , நேர்த்திக்கடன் செலுத்தியும் வணங்கினார்கள்.

மேலும் தமிழ் கலாச்சாரம் போற்றும் வகையில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் கச்சேரி விளையாட்டுப் போட்டிகள், வாண வேடிக்கை, கேரளா மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம் , சிலம்பாட்ட நிகழ்ச்சிகளுடன் அருள்மிகு கெங்கையம்மன் சிரசு மற்றும் பூங்கரகம் திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக ஏழு கிராமங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அபொது வீடுகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்தும் தங்களது நேர்த்தி கடன் நிறைவேற ஆடுகளை பலியிட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் உடைத்து வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி