கிராம நத்தம் நிலத்தில் யாரும் குடியிருக்காவிட்டால் அந்த நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், கிராம நத்தம் நிலத்தில் நீண்ட குடியிருந்தால் அந்த நிலத்தை அரசு நிலமாகவோ, ஆக்கிரமிப்பாகவோ கருத முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து நான்கு வாரங்களில் சுற்றறிக்கை விடக்கோரி நிலா நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.