தெலங்கானா மாநிலம் பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வரும் புதிய 6 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 7 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. கட்டுமான பணியின்போது திடீரென கட்டிடம் சரிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.