சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில், கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடப்பாண்டு கோடையில் நாள் ஒன்றுக்கு 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம். மின் தேவையை ஈடுசெய்ய 6,000 மெகாவாட் மின்சாரம் பெற டெண்டர் விடப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்றார்.