ஆம்பூரில் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில் பறிமுதல்

59பார்த்தது
ஆம்பூர் அருகே வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல்

வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம், சிவன்கோயில் வீதியில் பிச்சைமணி என்பவர் வீட்டில் கள்ளத்தனமாக அரசு மதுபானம் பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம் தலைமையிலான வருவாய் துறையினர் பிச்சைமணி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் கள்ளத்தனமாக மூன்று அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் பின்னர் பிசைமணியிடம் போலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவருடைய மச்சான் விஜி என்ற இளைஞர் பிச்சைமணியின் வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது


பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த இளைஞர் விஜி என்பவரை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி