ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீர்!

55பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியிலுள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாகவும் இதனால் ஆற்று நீர் முழுவதும் வெண்மை நிறம் கொண்ட நுரை ததும்பி காணப்படுகிறது.

இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டு இருக்கக் கூடிய செயல் பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியில் உள்ள பாலாற்றில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சில காலணி தொழிற்சாலைகள் ஆற்று வெள்ளத்தில் தோல் கழிவு நீரை கலந்து விட்டதால் ஆறு முழுவதும் படர்ந்து வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி