ஆம்பூரில் இலவச மருத்துவ முகாம்!

69பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 10 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இம்தியாஸ் அஹமத் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


இம்முகாமனது பிரபல டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஹீர்ஜாப் நிறுவனம் மற்றும் துளசி பார்மசி மெடிக்கல் நிறுவனம் ஆம்பூர் கிளை இணைந்து பல நடத்தினர்.

இதில் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் காது பரிசோதனை சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டது.


மேலும் இம்முகாமிற்கு ஆம்பூர் நகரப் பகுதியில் இருந்தும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி