பொதுவாக வெஸ்டர்ன் டாய்லெட் தண்ணீர் டேங்கின் மேல் 2 பட்டன்கள் இருக்கும். 2 பட்டன்களை அழுத்தினாலும் தண்ணீர் வரும். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சிறிய பட்டனை அழுத்தும்போது குறைவான தண்ணீரும், பெரிய பட்டனை அழுத்தும்போது நிறைய தண்ணீர் வரும். பொதுவாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் சுத்தம் செய்ய குறைவான தண்ணீர் போதுமானது. அதுவே மலம் கழிக்கும் சமயத்தில் அதிக தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.