வாணியம்பாடி: வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.13 லட்சம் மோசடி

76பார்த்தது
வாணியம்பாடி: வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.13 லட்சம் மோசடி
வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆயுள் (SBI LIFE INSURANCE) பணியாற்றும், ஜெயந்தி என்பவர், வேலை வாங்கி தருவதாக கூறி உத்திரகுமாரிடம் ரூ. 3,13,500 பெற்று, பின்னர் ஆயுள் காப்பீடு செய்தால் தான் வேலை கிடைக்கும் எனக் கூறி, பணத்தை ஆயுள் காப்பீட்டில் செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜெயந்தி, உத்திரகுமாருக்கு தேர்வு வைத்து, வேலை கிடைத்து விட்டது எனக்கூறி 5 மாதம் சம்பளமும் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜெயந்தி இந்த காப்பீட்டில் ஆட்களை சேர்த்தால், அதிக சம்பளம் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி உத்திரகுமார், தனது அக்கா மற்றும் அவரது கணவரையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துள்ளார், அவர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கிய நிலையில் கடந்த சில மாதங்களாக உத்திரகுமார் மற்றும் அவரது உறவினர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த உத்திரகுமார் மற்றும் அவரது உறவினர்கள் இதுகுறித்து தனியார் காப்பீடு அலுவலக ஊழியர்கள்மீது புகார் அளித்தார். அப்போது, அவர்கள் எவ்வித பதிலும் அளிக்காததால் ஆத்திரமடைந்த உத்திரகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆயுள் காப்பீட்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று, அலுவலக ஊழியர்களிடம் பணத்தை திருப்பி அளிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். தகவலின் பேரில் நகர காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி