இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

52பார்த்தது
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பத்தம் பாறைமேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் விழுந்தாக்கால் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கம்பத்தம் இந்து முன்னணி கிளை கமிட்டி பொதுச்செயலாளர் உள்ளார்.
அவர் கடந்த 10. 5. 2024 ஆம் தேதி அன்று ஊர் திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது சில பேர் ராமலிங்கத்தை தடுத்து மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் அவர் நடு மண்டையில் தாக்கி உள்ளார். ரத்த வெள்ளத்துடன் இருந்த ராமலிங்கத்தை அங்கிருந்தவர்கள் அடுக்கம்பாறை உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்து 8 தையல் போட்டு உள்ளது.
இது சம்மந்தமாக 11. 05. 2024 அன்று இலத்தேரி காவல் ஆய்வாளர் விசாரித்துள்ளனர். ஆய்வாளர். இதுவரை இலத்தேரி காவல் நிலையத்தில் அவரின் புகார் மனு மீது CSR கூட பதிவு செய்யவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் இன்று லத்தேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் லத்தேரி காவல் ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.
இது 2022 ஆம் ஆண்டு கம்பத்தம் பகுதியில் திமுக கொடி ஏற்றியதால் ஏற்பட்ட சண்டையால் தொடர்ச்சியாக இன்று வரை சண்டை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.