வள்ளலாரின் 201-வது பிறந்தநாள் இன்று (அக்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார். வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இடையூறுகள் முடிந்து விரைவில் பணிகள் தொடங்கும்” என கூறினார்.