நாடாளுமன்றங்களின் குழுத் தலைவராய் கனிமொழி தேர்வானதற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒரு பெரும் பெருமை வாய்த்திருக்கிறது கனிமொழி கருணாநிதிக்கு, நாடாளுமன்றங்களின் குழுத் தலைவராய் தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது. கனிமொழியை அமைச்சராக்கவில்லையா என்று கலைஞரை ஒருமுறை கேட்டேன் ‘காலம் வரட்டும்’ என்றார். இப்போது ஒருகாலம் அருகில் வந்து நழுவியிருக்கிறது. ஐந்தாண்டுகளில் ஆகலாம் அல்லது அதற்கு முன்பேகூடக் காலம் ‘கை’சேரலாம் கனவு மெய்ப்பட வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.