மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்

78பார்த்தது
மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்
மக்களவைக்குள் வெளியாட்கள் நுழைந்து புகை குண்டுவீச்சு சம்பவத்தில் பாதுகாப்பின் கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கூறியுள்ளார். பாதுகாப்புச் சோதனைகளை மீறி புகைக் குண்டுகளை அவர்கள் எப்படி எடுத்து வந்தனர் ? இந்தப் பாதுகாப்புக் குறைபாடு உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பில் நிலவும் குறைபாடு மற்றும் கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பதவி விலக வேண்டும். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 15 எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை உடனே ரத்து செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி