பள்ளிப்பருவம் என்பது மிகவும் அற்புதமான காலம். அப்பருவத்தில் நம்மிடம் பணம் இருக்காது, நினைத்ததை வாங்கி சாப்பிட முடியாது, உடுத்தி இருக்கும் பள்ளி சீருடை கூட அண்ணன், அக்காவின் பழைய சீருடையாக இருக்கும். ஆனால், நட்பு மட்டும் தீராத செல்வமாய் நம்மிடம் இருக்கும். தன்னிடம் இருப்பது 1 ரூபாய் ஆனாலும், அதில் நண்பனுக்கு சரி பங்கு அளிப்போம். அது போல் தான் இந்த வீடியோவில் நாம் காணும் பள்ளி குழந்தைகளும். பள்ளிப்பருவத்தில் அனுபவிக்க வேண்டிய நட்பை இழந்து விடாதீர்கள்... அக்காலம் மீண்டும் கிடைக்காது.