வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் புனிதமான விஷயமாகும். பஞ்சு திரி விளக்கு: தூய இலவம் பஞ்சு திரியினால் தீபம் ஏற்றுவதால் வீட்டில் மங்கலம் நிலைக்கும். தாமரைத்தண்டு திரி விளக்கு: இவ்வகை திரி தீபம் ஏற்றுவதால் முன்ஜன்ம பாவம் நீங்கும். சிவப்பு திரி விளக்கு: திருமணத்தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளை எருக்கன் திரி விளக்கு: இந்தத் திரியை தீபம் ஏற்றப் பயன்படுத்துவதால் வீட்டில் செல்வம் தங்கும்.