அமெரிக்கா: தெற்கு அரிசோனாவில் 2 சிறிய விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், டியூசனின் புறநகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அண்மையில் வாஷிங்டன், டி.சி.யில் இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் அமெரிக்கன் ஏர்லைன்ஸில் பயணித்த 67 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.