டங்ஸ்டன் சுரங்கம்: மதுரையில் சீமான் தலைமையில் போராட்டம்

55பார்த்தது
டங்ஸ்டன் சுரங்கம்: மதுரையில் சீமான் தலைமையில் போராட்டம்
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி நாதக சார்பில் வரும் 13ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், 13ஆம் தேதி காலை 10 மணியளவில் மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி