வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விள்ளம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்றார்.