திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். நாளை மறுநாள் (டிச., 13) கார்த்தி மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, 70 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பாதுகாப்பு கருதி மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.