சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் (டிச. 09) ஒருவரை கீழே தள்ளி கொலை செய்த சேட்டு என்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் சேட்டு மது போதையில் தள்ளாடியபடி செல்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தில், "எதற்காக தள்ளி விட்டேன் என எனக்கே தெரியவில்லை" என கூறி போலீசாரை அதிர வைத்துள்ளார்.