டங்ஸ்டன் விவகாரத்தில், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை பாஜகவினர் டெல்லி அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் நாளை மத்திய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளனர். நாளை பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வரும். இதில் உறுதியாக இருக்கிறோம். நாளை மதியத்திற்கு மேல் பேசுகிறோம். இந்த பிரச்சனைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.