சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரை கெட்டவார்த்தையால் சீமான் திட்டியதற்கு எதிர்ப்பு
திருச்சி எஸ்பி வருண்குமார் தனது வழக்கறிஞர் மூலம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். அவருடைய பொய்யான அபிப்பிராயங்களுக்காக நான் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.