6 மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்

77பார்த்தது
6 மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம்
ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள 6 மாவட்டங்களில் நாளை (டிச.06) முதல் 12ஆம் தேதி வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இந்த சிறப்பு முகம் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை குறைந்த வட்டியில் சிறு வணிக கடன் வழங்கப்படவுள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி