தீபக் ராஜன் கொலை வழக்கில் 3 பேரிடம் விசாரணை

60பார்த்தது
நெல்லை மாநகர் கேடிசி நகரில் நேற்று (மே 20) தீபக் ராஜன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி சாலையில் உள்ள உடற்கூறாய்வு மையத்தில் தீபக் ராஜன் உடல் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று அவரது உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (மே 21) இரண்டாவது நாளாகவும் உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காதலி உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

மறைந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் ஆதரவளரான தீபக் ராஜன் மீது 9 கொலை வழக்குகள் உட்பட சுமார் 40 வழக்குகள் உள்ளன.

தொடர்புடைய செய்தி