மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கஜேந்திரா (18) என்பவர் இளம்பெண் ஒருவரை சமூக வலைத்தளம் மூலம் காதலித்தார். அவளை சந்திக்க விரும்பினான். 1000 கி.மீ., தொலைவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் உள்ள தனது காதலியைப் பார்க்க கால்டாக்சி எடுத்துச் சென்றுள்ளார். இதனையறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் கஜேந்திரனை அடித்துக் கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்ச்குச் சென்ற போலீசார் கஜேந்திரனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.