தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூ.87 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் SH20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடியும், திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை முத்தம்பாளையம் ரோட்டை அகலப்படுத்த ரூ.6.84 கோடியும், மதுரை மாவட்டம் SH154-ஐ அகலப்படுத்த ரூ.18.29 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் ரோடுகளை அகலப்படுத்த ரூ.20.52 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.5.8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.