சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து மோசடியின் ஈடுபட்டு வந்த சங்கர், நாகப்பன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல், இவர்களிடம் இருந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில பல்கலைக்கழகங்களின் போலி சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.