அரசுப் பள்ளிகளில் AI படிப்பு.. அமைச்சர் அறிவிப்பு

52பார்த்தது
அரசுப் பள்ளிகளில் AI படிப்பு.. அமைச்சர் அறிவிப்பு
சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை AI படிப்பை கொண்டு வர முழு முயற்சியும் நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன” என்றார்.

தொடர்புடைய செய்தி