சினிமா மேடையில் அநாகரிகமாக பேசியதாக இயக்குநர் மிஷ்கினுக்கு, நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ், “சினிமா மேடைக்கென நாகரிகம் இல்லாமல் இஷ்டத்துக்கு பேசுவதா?. இயக்குநர் மிஷ்கின் நாவை அடக்கி பேச வேண்டும். பிறரை ஒருமையில் பேசும் அவர் என்ன பெரிய அப்பாடக்கரா?” என எச்சரித்துள்ளார். இவரின் பேச்சு சினிமா வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.