புதுக்கோட்டை: சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் குவாரி உரிமையாளர், அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனிம வளக் கொள்ளை நடப்பதாக புகார் கொடுத்த முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலரான ஜகபர் அலியை லாரி ஏற்றிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.