திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலை வைத்து நடக்கும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “MP நவாஸ் கனி, பிரிவினையைத் தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது தவறான செயல். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது” என குறிப்பிட்டுள்ளார்.