டிராக்டர் கவிழ்ந்து விபத்து: இளைஞர் பலி (வீடியோ)

72பார்த்தது
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ அருகே நடந்த டிராக்டர் பந்தயத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்ளூரில் இளைஞர்கள், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
யாருடைய டிராக்டர் வலிமையானது என்பதைக் காட்டும் வகையில் இந்த போட்டி காலி மைதானத்தில் நடந்தது.
மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை வழங்குவதாக அமைப்பாளர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், பந்தயம் தொடங்கிய சிறிது நேரத்தில் டிராக்டர் பின்னோக்கி நகர்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

சுற்றி நின்று பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது டிராக்டரை ஓட்டிச் சென்ற இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி