குடியிருப்பு மீது விழுந்த ராக்கெட் பாகம் (வீடியோ)

72பார்த்தது
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ராக்கெட்டில் அந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.புறப்பட்ட சிறிது நேரத்தில், ராக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் மீண்டும் பூமி நோக்கி வேகமாக வந்தது. புகையை கக்கியபடி சீறி பாய்ந்து வந்த ராக்கெட்டின் பாகத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்தப்படி ஓடினர். அந்த ராக்கெட் பாகம் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. குடியிருப்புக்குள் ராக்கெட் பாகம் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி