தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை.!

69பார்த்தது
தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை.!
தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊர்களில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி