ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இரண்டு புதிய கார்களை இந்திய சந்தையில் நேற்று(மே 22) அறிமுகப்படுத்தியது. GLS 600 4Matic SUV விலை ரூ.3.35 கோடி மற்றும் ஏஎம்ஜிஎஸ் 63 எடிஷன் 1 விலை ரூ.3.3 கோடியாகவும் நிர்ணயம் செய்துள்ளது. காரின் வெளிப்புறத்தில் புதிய க்ரில், புது பம்பர் என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 18,123 கார்களை விற்பனை செய்துள்ள பென்ஸ், நடப்பு நிதியாண்டில் விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது.