ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை

82பார்த்தது
ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் திலகர் (24). இவர் ஓட்டுநராக இருந்ததுடன், கடந்த 2018 முதல் ஊர்க்காவல் படையிலும் இருந்தார். கரூர் திருமகூடனூரைச் சேர்ந்த நேஜா என்பவரை ஓராண்டுக்கு முன் இவர் காதல் திருமணம் செய்த நிலையில், குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதே போல, கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில் நேஜா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், கணவர் வீட்டுக்கு வர மறுத்தாராம். இதனால் மனமுடைந்த திலகர், நேற்று (மே 22) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் வந்த அரியமங்கலம் போலீசார் திலகரின் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி