குற்றால அருவியில் சென்சார் பொருத்த திட்டம்

68பார்த்தது
குற்றால அருவியில் சென்சார் பொருத்த திட்டம்
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று (மே 17) பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தை தடுக்கும் விதமாக அருவியில் சென்சார் பொருத்த முடிவுசெய்துள்ளனர். அதன்படி, சென்னை ஐஐடி பேராசிரியர் குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதியில் பொருத்த திட்டமிட்டுள்ளனர். காட்டாற்று வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் சென்சார் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி