ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் மற்றும் ஹவால்தார் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 8,326 பணியிடங்கள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். MTS பதவிகளுக்கு 18-25 வயது, ஹவால்தார் பதவிகளுக்கு 18-27 வயது இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும். ஜூலை 31, 2024க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.